சிவப்பு கந்திரி மாடு..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-24 10:42:08

சிவப்பு கந்திரி மாடு:- 

(Red Kandhari) உள்ளூரில் லால் கந்திரி என அழைக்கப்படும் இவை இந்தியாவின் நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றாகும்.  இவை அவற்றின் ஆழ்ந்த சிவப்பு நிற தோலின் நிறத்தால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க இப்பெயரால் அழைக்கப்படுகிறன. இவை மகாராட்டிரத்தின் மராத்வாடா வட்டாரத்தின் நாந்தேட் மாவட்டத்தின்லாத்தூர், கந்தார் வட்டங்கள், பிரபானி மாவட்டப் பகுதிகள், மற்றும் இதை ஒட்டிய வட கர்நாடகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த இன மாடுகளுக்கு 4 கி.பி. இல் கந்தர் பகுதியை ஆண்ட மன்னர் சோமதேவராய அரசின் ஆதரவு இருந்த‍தாக அறியப்படுகிறது. இந்த மாடுகள் நடுத்தர அளவில் வலுவான தோற்றத்தில் இருக்கும். கந்திரி மாடுகள் பரவலாக முதன்மையாக கடினமான பணிகளுக்காக, பயன்படுத்தப்படுகின்றன.

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு … என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.

இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.

இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.

அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.

எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என “UNO” போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.

அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.

சுயசார்பு பொருளாதாரம்:-

முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து… இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்..