வட இந்தியா ஹரியான மாடு..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-26 10:26:45

பகுதிகள்:-

இது ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டம்கர்னால் மாவட்டம்ஜிந்துஹிசார்குருகிராம் போன்ற மாவட்டங்களை பூர்வீகமாக‍க் கொண்டது. இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளன, இவை பொதுவாக சாம்பல் நிறம் திட்டுக்களுடன் வெண்மையாக உள்ளன.

அம்சங்கள்:-

இவற்றின் கொம்புகள் குறுகியதாகவும் அதன் முகம் குறுகி நீண்டதாக இருக்கும். இந்த மாடுகள் மிகவும் நல்ல பால் தருபவையாகவும், மற்றும் எருதுகள் நன்கு வேலை செய்பவையாகவும் உள்ளன. இவை கறவை உழைப்பு ஆகிய இருநோக்கங்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.[3] இவற்றின் முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள் ஆகும்.

பிறப்பிடம்:-

ஹரியானா இனம், அரியானா மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகளை பூர்வீகமாக‍க் கொண்டவை. இவை இண்டிகா சீபு மாட்டினத்தில் அறியப்பட்ட 75 இனங்களில் ஒன்றாகும்.

ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது.

இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும்.

காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.

இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக  1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள்.

ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்.