நிமாரி மாடு எங்கே..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-26 11:03:52

நிமாரி மாடு:-

என்பது இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும், இது மத்திய பிரதேசத்தின் தென்மேற்கு பகுதியான நிமாரி பிரதேசத்தில் தோன்றியது ஆகும். இந்த மாடு கிர் மாடு மற்றும் கிலரி மாடுகளிடமிருந்து தோன்றியதாக கருதப்படுகின்றன. இந்த மாடுகள் மத்திய பிரதேசத்தின் நர்மதை ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியிலும் மகாராட்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்திலும் வாழ்கின்றன.

இந்த மாடுகள் உழைப்பு மாடுகளாகும், இவை மிதமான அளவு பால்தரக்கூடியன. இவை நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளனவாகவும், ஆக்கிரமிப்பு குணம் கொண்டவையாகவும் இருக்கின்றன.  பொதுவாக இந்த மாடுகள் சிவப்பு நிறத்திலும், ஆங்காங்கே வெள்ளை நிற திட்டுக்களுடன் காணப்படும். இவற்றின் உடல் அமைப்பு நேரானதாகவும், நீண்டதாகவும் இருக்கும். காதுகள் தொங்காமல், தடிமனாக இருக்கும். இவற்றின் குளம்புகள் வலுவானதாகவும், நேரானதாகவும் இருக்கும்.

இந்திய மாடுகளின் முக்கிய அம்சங்கள்:-

உடலின் ஒரு குறிப்பிட்டப் பகுதியை உலுக்க முடியும், உதாரணமாக உடலின் மற்ற பாகங்களை உலுக்காமல் வயிற்று பகுதியின் தோலை மட்டும் உலுக்க முடியும்.

நாட்டின் வெயில், மழை, குளிர் போன்ற காலநிலைக்கேற்ப தாங்கிக் கொள்ளும் தன்மை.

15 முதல் 20 கன்றுகளை வாழ்நாளில் ஈனும்.

பல கிலோமீட்டர் தூரம் நடக்க கூடியது. மேலும் உலகின் பல்வேறுபட்ட காலநிலையை ஏற்று கடின வேலையை செய்யும்.

ஒரு மாடானது தனது வாழ்நாள் முழுவதிலும் 1000 மக்களுக்கு உணவளிக்கிறது மற்றும் 10 ஏக்கர் விவசாயத்திற்கு ஒரு மாடு போதுமானதாக இருக்கிறது.