பயிர்களின் நீர் மேலாண்மை திட்டங்கள்.!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-07-04 07:56:38

துவரை:-

நீர் நிர்வாகம்

இறவை நிலங்களில் விதைத்தவுடன், விதைத்த 3ம் நாள் மொட்டு உருவாகும் சமயம், 50 சத பூக்கும் தருணம், காய் வளர்ச்சியடையும் தருணங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.

நீர் மேலாண்மை

 • நீர் மேலாண்மை என்பது உலகின் பெரும்பாலான பகுதிகளில் சில கோணங்களில் ஏற்படுகின்ற, மழையளவு பற்றாக்குறையையும் மாறுபாட்டையும் கையாளப் பயன்படுத்தப்படுவதாகும்.
 • விதைமுளைத்தல், மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுதல் மற்றும் ஒளிச்சேர்க்கை போன்ற செயல்களைச் செய்ய தாவரங்களுக்கு நீர் இன்றியமையாததாகும்.
 • ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தாவரங்களின் வளர்ச்சிக்காக நீர்ப்பாய்ச்சும் செயல் நீர் மேலாண்மை எனப்படும்.
 • கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள்,  அணைகள், கால்வாய்கள் போன்றவை நீர்ப்பாய்ச்சுதலுக்குத் தேவையான ஆதார மூலங்களாகும். சில விவசாயிகள் பற்றாக்குறையினை நிரப்ப நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பாரம்பரிய முறை

 • ககப்பிமுறை, சங்கிலி முறை, ஏற்றம் முறை போன்ற முறைகள் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் நீர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் முறைகளாகும். இவை மலிவானவை ஆனால் திறன் குறைந்தவை.

நவீன நீர்ப்பாசன முறை

 • வயல்களில் பயிர்வரிசைகளுக்கிடையே உள்ள உழவுக்கால் (சால்) வழியாக நீர் பாய்ச்சும் கால்வாய்ப்பாசனம், வயல் முழுதும் நீரைத் தேக்கி வைக்கும் தேக்கு நீர்ப்பாசனம்.
 • ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துகொள்ள இயலாத மண்வகைகளுக்கான தெளிப்பு நீர்ப்பாசனம், மழை நீர் குறைவாகக் கிடைக்கும் காலங்களில் தாவர வேருக்கு மிக அருகில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படும் சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய பாசன முறைகள் நவீன காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 • பொதுவாக விளை நிலங்களில் தேங்கும் நீர் தாவரங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் நீர்ப்பாய்ச்சுதலில் கவனமுடன் இருக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வேளாண்மைக்காக 6௦ சதவிகித நன்னீர் பயன்படுத்தப்படுகிறது.

உளுந்து:-

நீர் நிர்வாகம்

 • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர், மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும்.
 • காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.
 • பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 • துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

பாசிப்பயறு:-

நீர் நிர்வாகம்

 • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த்தண்ணீர், மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும்.
 • காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.
 • பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 • துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

தட்டைப் பயிறு:-

நீர் நிர்வாகம்

 1. விதைத்த உடன் நீர் பாய்ச்சுதல் அவசியம்.
 2. மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர்
 3. மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலையைப் பொறுத்து 7 லிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம்.
 4. பொட்டாசியம் குளோரைடு 0.5 சதவீதம் தழை வளர் பருவத்தில் தெளிப்பதினால் ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம்.

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் நீர் கட்ட வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து தினமும் நீர் ஊற்ற வேண்டும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் நீர்கட்ட வேண்டிய முக்கிய நிலைகளாகும்.

சோயா மொச்சை:-

நீர் நிர்வாகம்

 • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்ட வேண்டும்.
 • பின்னர் மண் மறறும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
 • சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும்.
 • வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்கவேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை.
 • வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
 • அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.
 • இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
 • இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
 • களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.

அவரை:-

நீர் நிர்வாகம்

 • விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும்.
 • மண் மற்றும் பருவநிலையைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும்.
 • பயிர் பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் நீர் கட்ட வேண்டியது மிக அவசியம்.
 • வளர்ச்சிப் பருவத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது அவசியம்.
 • பயிர் நிலத்தில் ஈரம் குறைவாக இருந்தால் 0.5 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும்.

வாள்அவரை:-

நீர் நிர்வாகம்

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம்

சொட்டு நீர்ப்பாசனம்

 • பயன் குறைந்த நீரினைக் கொண்டு பயிர் செய்திட முடிகிறது.
 • களைகள் கட்டுப்படுத்தப்படுவதால் அதற்கான ஆட்செலவு குறைக்கப்படுகிறது.
 • அதிக விளைச்சல் கிடைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.
 • மானியம் மாநில அரசு வழிமுறைக்குட்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியம். இதர விவசாயிகளுக்கு 75% மானியம் மற்றும் 25%  பயனாளிகள் பங்கு.

தெளிப்பு நீர்ப்பாசனம்:-

பண்ணைகள் குட்டைகளின் மூலம் சேகரிகக்கப்படும் மழைநீரைக் கொண்டு பயிர்களுக்கு உயிர்ப்புத் தண்ணீர் அளிக்கப்படுகிறது.

மேலும், மீன்வளர்ப்பு மூலம் உபரி வருமானம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மானியம் பொது பிரிவினருக்கு 90% மானியம் மற்றும் 10% பயனாளிகளின் பங்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 95% மானியம் மற்றும் 5% பயனாளிகள் பங்கு.

ஒருங்கிணைந்த மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண்வளப் பாதுகாப்புப் பணிகள்

இத்திட்டம் சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலை, அருநுத்து மலை, கல்வராயன் மலை மற்றும் பச்சமலைகளில் செயல்படுத்தப்படுகிறது.

சம உயர கற்சுவர் கட்டுதல், நிலம் வடிவமைத்தல், குழாய் பதித்தல், உழவுப்  பணிகள், பாசன தடுப்பு அணைகள் கட்டுதல், பெரிய மற்றும் சிறிய தடுப்பு அணைகள் கட்டுதல், கம்பிவலை தடுப்பணை கட்டுதல், உதிரி கற்கள் தடுப்பணை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 • சம  உயர கற்சுவர்
 • உதிரி கற்கள் தடுப்பணை
 • தடுப்பணைகள்
 • கம்பிவலை தடுப்பணை

மழைநீர் சேகரிப்பு மற்றும் உபரிநீர் மேலாண்மைத் திட்டம்:-

 • இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் (நீலகிரி மற்றும் சென்னை மாவட்டம்  நீங்கலாக) செயல்படுத்தப்படுகிறது.

செறிவூட்டும் குழாய் கிணறுடன் வடிய கசிவு நீர்க்குட்டைகள் பெரிய நடுத்தர மற்றும் சிறிய தடுப்பணைகள் பண்ணைக்குட்டைகள், கிராம குளங்கள், ஊரணிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 • பண்ணைக் குட்டை
 • கசிவு நீர்க்குட்டை
 • கிராமக்குளம்
 • மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு
 • பயன்  சமுதாய நிலங்களில் 100% மானியம்.
 • பட்டா நிலங்களில் 90% மானியம் மற்றும் 10% பயனாளிகளின் பங்கு.

தகவல், கல்வி, பரிமாற்றம் மற்றும் பயிற்சிகள்:-

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கையாள்வதில் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு ஒரு வார பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நோக்கம்

 • பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமான 6 மாத கால பயிற்சிகள் கிராமப்புற இளைஞர்களுக்கு கோயம்புத்தூர்,  மதுரை, வேலூர், திருச்சி, திருவாரூர், மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அளிக்கப்படுகின்றன.