அரை ஏக்கர்... 160 நாட்கள்... நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு வெண்டை!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-09 05:52:15

இப்படித்தான் சாகுபடி செய்யணும்:-

வீரிய ரக வெண்டை சாகுபடி செய்தால், மறுசாகுபடிக்கு அதன் விதைகளைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் கடையில்தான் விதை வாங்க வேண்டும். ஒரு கிலோ விதை 750 ரூபாய். நாட்டு வெண்டை சாகுபடி செய்தால், இதன் விதைகளை மறு சாகுபடிக்குப் பயன்படுத்தலாம்.

வெண்டை சாகுபடி – பருவகாலம்:-

வைகாசி, ஆனி, ஆடி போன்ற வறட்சி காலங்கள் இந்த வெண்டை சாகுபடிக்கு ஏற்ற பருவ காலங்கள் ஆகும்.

  • அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.
  • ஆண்டு முழுவதும் பயிரிடலாம்...
  • ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்தால், அதிக விலை.
  • நாட்டு வெண்டை 120 நாள் மகசூல் கொடுக்கும்.
  • சராசரி 6 ஆயிரம் கிலோ மகசூல்.

நிலம் தயாரிப்பு:-

ஈரப்பதம் இல்லாத நிலத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

நிலத்தை தேர்வு செய்த பிறகு, ஒரு முறை உழுது செய்து, நிலத்தை இரண்டு நாட்கள் வரை காய விட வேண்டும். பின்பு திரும்ப ஒரு முறை உழுது செய்து நிலத்தை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

விதையளவு:-

வாய்க்கால் உள்கரைகளில் செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு ஒரு குச்சியால் ஓர் அங்குல ஆழத்துக்கு குழி பறிக்க வேண்டும். 100 கிராம் ஆட்டு எருவை மண்ணோடு கலந்து குழியில் போட்டு, தலா 2 விதைகள் போட வேண்டும். அரை ஏக்கரில் விதைப்பு செய்ய ஒன்றரை கிலோ நாட்டு வெண்டை தேவைப்படும்.

உரம்:-

இயற்கை முறையில் நாம் சாகுபடி செய்கின்றோம் என்றால் ஏக்கருக்கு 4 டன் தொழு உரத்தை அடி உரமாகவும், 1 டன் மண்புழு உரத்தை மேல் உரமாகவும் மற்றும் ஏக்கருக்கு 150 கிலோ வேப்பம்பிண்ணாக்கை செடிகளுக்கு உரமாக இடும்போது, பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, அதிக மகசூல் பெற வழிவகுகிறது.

விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். பயிர் நன்கு வளர்ச்சி அடைந்து மகசூலை அதிகரிக்க பெரிதும் இது உதவுகிறது.

மூலிகைப் பூச்சிவிரட்டி:-

தலா 5 கிலோ புங்கன், வேம்பு, ஆடாதொடை, நொச்சி, எருக்கன் இலை மற்றும் 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு வடிகட்டி, அந்தக் கரைசலோடு, தலா 100 மில்லி புங்கன் மற்றும் வேப்பெண்ணெய், 100 கிராம் காதி சோப்பு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசல்:-

ஒரு கிலோ பச்சைமிளகாய், அரை கிலோ இஞ்சி, கால் கிலோ பூண்டு, 100 கிராம் புகையிலை கலந்து மிக்ஸியில் அரைத்து, 4 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

2 லிட்டர் அளவுக்கு கரைசல் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பு கலந்து ஊறவைத்து, தலா 50 மில்லி புங்கன், இலுப்பை மற்றும் வேப்பெண்ணெயைக் கலந்து நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு பாத்திரங்களில் உள்ள கரைசல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வடிகட்டினால், தெளிந்த கரைசல் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை இதுபோல் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்.

மொத்தம் 60 பறிப்பு:-

விதைப்பிலிருந்து 40 ம் நாள்ல காய் பறிப்புக்கு வரும். ஒரு நாள் விட்டு ஒருநாள் காய் பறிப்போம். மொத்தம் 60 பறிப்பு பறிக்கலாம். காய் பறிப்புக்கு வந்ததுல இருந்து அடுத்த 120 நாள் வரைக்கும் காய்ப்பு இருக்கும். சராசரியா 6 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ குறைந்தபட்சம் 15 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 26 ரூபாய்க்கு விலை போகுது. சராசரியா கிலோவுக்கு 20 ரூபாய் விலை கிடைக்குது. இயற்கை முறையில விளைஞ்சதுனாலயும், சுவையா, தரமா இருக்கிறதுனாலயும் வீடு தேடி வந்து மக்கள் வாங்கிக்கிட்டுப் போறாங்க. இந்த அரை ஏக்கர் இயற்கை முறை நாட்டுரக வெண்டி சாகுபடி மூலமாக 160 நாள்ல ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 75 ஆயிரம் ரூபாய் லாபமாக மிஞ்சுது. 160 நாளுக்கு பிறகும் கூட செடிகள் உயிர்ப்போடு இருக்கு. செடியை கவாத்து பண்ணி, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் கொடுத்தோம்னா, அடுத்த 80 நாட்களுக்கு காய்கள் கிடைக்கும்.

பயன்கள்:-

``வாயோ வெண்டைக்காய், கையோ கருணைக்கிழங்கு...' என்று ஒரு பழமொழி உண்டு. வெண்டைக்காயைப்போல வளவளவென்று  பேசி கருணைக்கிழங்கைப்போல எரிச்சலூட்டும்படி நடப்பவர்களை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறது இந்தப் பழமொழி. வெண்டைக்காய் வளவளப்பானது மட்டுமல்ல, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அற்புத மருத்துவத்தன்மை நிறைந்தது. 

சத்துக்கள்:-

LADIES FINGERS |

* Based on 100gram

ENERGY

: 35    (KCAL)

PROTEIN

: 1.9    (G)

FATS

: 0.2    (G)

CARBS

: 6.4    (G)

FIBER

: 1.2    (G)

CALCIUM

: 66    (MG)

IRON

: 0.35    (MG)

VIT C

: 13    (MG)


VIT A

: 52    (MCG)

VIT B1

: 0.07    (MG)

VIT B2

: 0.1    (MG)

VIT B5

: 0.6    (MG)

VIT B6

: 0    (MG)

FOLATE