நூக்கல் வளர்ப்பு மற்றும் நூக்கல் பயன்கள்..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-11 06:16:55

இரகங்கள்:-

மலைப்பகுதிகளில் பர்பில் டாப், ஒயிரிகுளோப், சுனோபால் போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சமவெளிப்பகுதிகளில் பூசா சந்திரீமா, பூசா சுவேதா, பூசா காஞ்சன் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

நிலம்:-

நூக்கல் வளர்ப்பு பொறுத்தவரை அனைத்து வகை பகுதிகளிலும் வளரக்கூடியது. குறிப்பாக செம்மண் நிலத்தில் நூக்கல் நன்கு வளரும் தன்மைகொண்டது.

பருவகாலம்:-

நூக்கல் மார்கழி மாதங்களில் நன்கு வளரக்கூடியது எனவே, மார்கழி மாதம் நூக்கல் சாகுபடிக்கு சிறந்த பருவக்காலமாகும்.

விதையளவு:-

நூக்கல் சாகுபடி பொறுத்தவரை இரண்டு முறைகளில் சாகுபடி செய்யலாம்.

நாற்று நடவு முறை மூலம் நூக்கல் சாகுபடி செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படும்.

நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 650 கிராம் விதைகள் தேவைப்படும்.

அதிக பரப்பளவில் நோக்கல் சாகுபடி செய்வதாக இருந்தால் நேரடி விதைப்பு முறைதான் ஏற்றதாகும்.

நாற்று உற்பத்தி:-

நாற்று நடவு முறையில் சாகுபடி செய்வதாக இருந்தால், குழித்தட்டுகளில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். குளித்தட்டில் தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவற்றை சேர்த்து நிரப்பி விதைகளை ஊன்ற வேண்டும்.

அதன் பிறகு தினமும் பூவாளி கொண்டு குளித்தட்டுகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். 25 நாட்களில் குளித்தட்டுகளில் நாற்றுகள் தயாராகிவிடும்.

நிலம் தயாரிப்பு:-

நூக்கல் சாகுபடிக்கு நிலம் தயாரிப்பு பொறுத்தவரை ஒரு கிலோ கொம்புசானம் அல்லது ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஷ்போ – பாக்டீரியா மற்றும் 10 டன் தொழுவுரம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தூவி இரண்டு சால் உழவு ஓட்டி, பார் பாத்திகளை அமைக்க வேண்டும்.

விதைப்பு முறை:-

நூக்கல் சாகுபடி பொறுத்தவரை நாற்று நடவு மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் 4 அங்குல இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் தானியங்களை விதைப்பது போல் நூக்கல் விதையை சாகுபடி நிலத்தில் தூவ வேண்டும். விதைத்த பின் டிரக்ட்டரிலோ, ஏர்  கலப்பையிலோ நிலத்தை சமன் செய்து, நீர் பாசனம் செய்ய வசதியாக, பார் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொருத்து பாரின் அளவை அமைத்துக் கொள்ளலாம்.

நீர் மேலாண்மை:-

நூக்கல் சாகுபடி பொறுத்தவரை நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள்:-

நடவு செய்த 8-ம் நாள், ஒரு ஏக்கருக்கு 4 டேங்க் (10 லிட்டர்) வேப்பங்கொட்டைக் கரைசலை (100 லிட்டர் நீரில் 3 கிலோ பச்சை வேப்பங்கொட்டையை நசுக்கி 3 நாட்கள் ஊற வைத்த கரைசல்) தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளிப்பதினால் வெட்டுப்புழு, வேர்களை தாக்குகின்ற வெள்ளைப் புழு, கருப்புப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

நடவு செய்த 35-ம் நாட்களில் ஒன்றரை டன் மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.

45-ம் நாளுக்கு மேல், பாத்திக்கு ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் (40 கிலோ கடலை பிண்ணாக்கு, 60 கிலோ ஆமணக்கு பிண்ணாக்கு, 100 கிலோ பசுஞ்சாணம், 3 கிலோ வெல்லம் ஆகியவற்றை 300 லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்த கரைசல்) தெளிக்க வேண்டும்.

மகசூல்:-

நடவு செய்த 45 நாட்களுக்கு மேல் கிழங்குகள் பெருத்து, 60 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். செடிகளை வேரோடு பறித்து, வேர்களை முறுக்கி எடுக்க வேண்டும். மேற்பகுதியில் இருக்கிற தழைகளை ஒடித்துவிட்டு, அப்படியே மூட்டை பிடிக்கலாம். நன்றாக விளைந்திருந்தால், ஒரு கிழங்கு கால் கிலோ அளவு எடை இருக்கும்.’

நன்மைகள்:-

குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

நூக்கலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது.மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.

நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.

நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

சத்துக்கள்:-

KNOL KHOL |

* Based on 100gram

ENERGY

: 21    (KCAL)

PROTEIN

: 1.1    (G)

FATS

: 0.2    (G)

CARBS

: 3.8    (G)

FIBER

: 1.5    (G)

CALCIUM

: 20    (MG)

IRON

: 1.54    (MG)

VIT C

: 85    (MG)


VIT A

: 21    (MCG)

VIT B1

: 0.05    (MG)

VIT B2

: 0.09    (MG)

VIT B5

: 0.5    (MG)

VIT B6

: 0    (MG)

FOLATE