சின்ன வெங்காயம் எப்படி பயிரிடுவது..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-11 09:18:52

இரகங்கள்:-

கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய இரகங்கள் ஏற்றவை.

பருவம்:-

ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் ஏற்ற பருவம் ஆகும்.

மண்:-

மண்ணின் கார, அமிலத் தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும்.

நிலம் தயாரித்தல்:-

நிலத்தை 2 முதல் 3 முறை உழுது, கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார் பாத்திகள் அமைத்து, நிலத்தை தயார் செய்யவேண்டும்.

விதையளவு:-

ஒரு எக்டருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும்.

விதைத்தல்:-

விதை வெங்காயத்தை 10 செ.மீ இடைவெளியில், பார் பாத்திகளின் இருபுறங்களிலும் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்:-

விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்:-

நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

களை நிர்வாகம்:-

விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

சாறு உறிஞ்சும் பூச்சி:-

இந்தப் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி:-

நோய்களில் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும். அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளிக்க வேண்டும்.

கீழ்த்தண்டு அழுகல் நோய்:-

ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அதிகம் காணப்படும் கோழிக்கால் சீக்கு, கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்:-

இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால், காய் திரட்சியாக நல்ல நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்கும்.

அறுவடை:-

வயலில் வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

மகசூல்:-

ஒரு எக்டருக்கு 15 முதல் 20 டன் சின்ன வெங்காயம் கிடைக்கும்.

பயன்கள்:-

ஜலதோஷம்நெஞ்சு படபடப்புஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு  சாப்பிட்டுவெந்நீர் குடித்தால்… ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும். உடல் சமநிலைக்கு வந்துடும்.

இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது  முதலுதவி  சிகிச்சையாக இதை செய்யலாம்

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கிதொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்துஇதயம் பலமாகும்.

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக 
சேர்ப்பது நல்லதுநீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு 
குடித்தாலும் பலன்  கிடைக்கும்.

சத்துக்கள்:-

ONION, SMALL |

* Based on 100gram

ENERGY

: 59    (KCAL)

PROTEIN

: 1.8    (G)

FATS

: 0.1    (G)

CARBS

: 12.6    (G)

FIBER

: 0.6    (G)

CALCIUM

: 40    (MG)

IRON

: 1.2    (MG)

VIT C

: 2    (MG)


VIT A

: 15    (MCG)

VIT B1

: 0.08    (MG)

VIT B2

: 0.02    (MG)

VIT B5

: 0.5    (MG)

VIT B6

: 0    (MG)

FOLATE