பெரிய வெங்காயம் எப்படி பயிரிடுவது..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-11 09:35:02

இரகங்கள்:-

அடர் சிகப்பு ரகங்களில் என் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்:-

தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே – ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும், ஆகஸ்ட் – செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் குளிர் கால வெங்காய சாகுபடியில் தான் சிறந்த மகசூல் கிடைக்கும்.

மண்:-

இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் களிமண் நிலங்களை வெங்காய சாகுபடிக்கு தவிர்ப்பது நல்லது.

விதையளவு:-

எக்டருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைநேர்த்தி:-

ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்:-

ஒரு எக்டருக்கு நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றங்கால் இடவசதி தேவைப்படும். நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ என்ற அளவில் விஏஎம் என்ற பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றங்காலுக்கு, செண்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் டிஏபி இட்டால் நல்ல வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும். நாற்றங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுகள், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்:-

சாகுபடி செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். 45 செ.மீ மற்றும் 10 செ.மீ இடைவெளியில் 45 நாள் வயதுடைய நாற்றுகளை நட வேண்டும்.


நீர் நிர்வாகம்:-

வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நீருடன் பஞ்சகாவ்யா கலந்தும் கொடுக்கலாம். இதனால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உரங்கள்:-

வெங்காயம் பயிர் செய்யும்போது அடியுரமாக கடைசி உழவில் எக்டருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும். மேலும் எக்டருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும். நாற்று நட்ட 30-ஆம் நாள், எக்டருக்கு 24 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும்.வெங்காயம் பயிர் செய்யும்போது அடியுரமாக கடைசி உழவில் எக்டருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும். மேலும் எக்டருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும். நாற்று நட்ட 30-ஆம் நாள், எக்டருக்கு 24 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும்.

களை நிர்வாகம்:-

விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி:-

இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இதை அதிகமாக தாக்கும். இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பாலுடன், ஒரு லிட்டர் நீருக்கு அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை:-

வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம்.

மகசூல்:-

எக்டருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

பயன்கள்:-

நான்கு அல்லது ஜந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

சத்துக்கள்:-

ONION, BIG |

* Based on 100gram

ENERGY

: 50    (KCAL)

PROTEIN

: 1.2    (G)

FATS

: 0.1    (G)

CARBS

: 11.1    (G)

FIBER

: 0.6    (G)

CALCIUM

: 46.9    (MG)

IRON

: 0.6    (MG)

VIT C

: 11    (MG)


VIT A

: 0    (MCG)

VIT B1

: 0.08    (MG)

VIT B2

: 0.01    (MG)

VIT B5

: 0.4    (MG)

VIT B6

: 0    (MG)

FOLATE