உருளைக்கிழங்கு பயிரிடும் முறை..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-12 09:58:36

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்:-

குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர், குப்ரி சோகா மற்றும் குப்ரி கிரிராஜ் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவகாலம்:-

மலைப்பகுதிகளுக்கு மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர், ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

சமவெளிப்பகுதிகளுக்கு அக்டோபர்-நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.

மண்:-

மண் கெட்டியாக இல்லாமல், நன்கு நீர் வடியக் கூடிய செம்மண் நிலங்கள் ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 4.8 முதல் 5.4 ஆக இருக்க வேண்டும். இது ஒரு குளிர்காலப் பயிராகும். பொதுவாக உருளைக்கிழங்கு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வருடத்திற்கு 1200-2000 மி.மீ மழை பொழியும் பகுதியில் சாகுபடி செய்யலாம்.

நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும். மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்க வேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.

விதைநேர்த்தி:-

ஒரு எக்டருக்கு 3000-3500 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும்.

உருளைக்கிழங்கு சாகுபடியில் விதைத்தயாரிப்பு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். புதிய கிழங்குகளின் முளைப்புத் திறன் சீராக இருக்காது. ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். கிழங்குகளை குவியலாக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாளினால் மூடிவிடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நிலத்தின் சாய்தளத்தைப் பொறுத்து செடிக்கு செடி 15-20 செ.மீ இடைவெளியில் முளைவந்த கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நடவுக்குப் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

உரம்:-

ஒரு எக்டருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் எக்டருக்கு 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும்.

விதைத்த 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்கவேண்டும்.

முதல் களை எடுப்பு 45வது நாளில் செய்ய வேண்டும். இரண்டாவது களை எடுப்பு மற்றும் மண் அணைத்தல் பயிரிட்ட 60 நாட்களில் செய்ய வேண்டும். விதை விதைத்த 60 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அறுவடை:-

விதைத்த 120 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 15-20 டன் மகசூல் கிடைக்கும்.

பயன்கள்:-

உருளைக்கிழங்கில் கலோரிகள், பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.

தீப்புண்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும், மேலும் அந்த தடமும் விரைவில் மறைந்துவிடும்.

கீழ்வாதம், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக் கிழங்கை தோலுடன் பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால் முற்றிலும் குணமாகும்.

முகம் புத்துணர்ச்சியாக இருக்க பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும்.

சத்துக்கள்:-

POTATO |

* Based on 100gram

ENERGY

: 97    (KCAL)

PROTEIN

: 1.6    (G)

FATS

: 0.1    (G)

CARBS

: 22.6    (G)

FIBER

: 0.4    (G)

CALCIUM

: 10    (MG)

IRON

: 0.48    (MG)

VIT C

: 17    (MG)


VIT A

: 24    (MCG)

VIT B1

: 0.1    (MG)

VIT B2

: 0.01    (MG)

VIT B5

: 1.2    (MG)

VIT B6

: 0    (MG)

FOLATE

: 7    (MCG)