கேரட் சாகுபடி முறைகள் ..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-12 10:19:58

இரகங்கள்:-

மலைப்பகுதிகளுக்கு ஊட்டி, நியு கொர்டா, நேன்டிஸ் ஆகிய இரகங்கள் ஏற்றவை. சமவெளிப்பகுதிகளுக்கு இந்தியா கோல்டு, பூசாகேசர் மற்றும் ஹாப்லாங் டான்வர்ஸ் இரகங்கள் ஏற்றவை.

பருவகாலம்:-

மலைப்பகுதிகளுக்கு பிப்ரவரி, ஜீலை மாதம் பயிரிட ஏற்றது. சமவெளி பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் ஏற்றது.

மண்:-

கேரட் சாகுபடி செய்வதற்கு செம்மண் மிகவும் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0-7.0 வரை இருக்க வேண்டும்.

விதைத்து 45 நாட்கள் கழித்து தலா 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை மேலுரமாக இடவேண்டும்.

விதைத்தவுடன் எக்டருக்கு புளுக்ஃகுளோரின் 1 லிட்டர் தெளித்து களைகள் முளைக்கும் முன்பே கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 15 நாட்கள் கழித்து ஒரு கைக்களை எடுத்து மண் அணைக்கவேண்டும்.

உரம்:-

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்கவேண்டும். பிறகு 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். இதனுடன் 25 கிலோ சல்பேட்டையும் இடவேண்டும்.

விதை நேர்த்தி:-

ஒரு எக்டருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும்.

மலைப்பகுதியில் தேவையான அளவுக்கு நீள, அகலம் உள்ள மேட்டுப்பாத்திகள் அமைத்து விதைக்க வேண்டும். சமவெளிப்குதிகளில் பார் பிடித்து 5 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும். விதைகளை விதைக்கும் போது ஒரு பங்கு விதைக்கு நான்கு பங்கு மணல் கலந்து விதைக்க வேண்டும். விதைகள் விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு வளமாக ஒரு செடிவிட்டு மீதியை கலைத்து விடவேண்டும்.

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:-

இரகங்களுக்கு ஏற்றவாறு அறுவடைக் காலம் வேறுபடும். செடிகளின் அடிப்பாகத்தில் இலைகள் வாடத் தொடங்கினால் அதுவே கேரட் அறுவடை செய்வதற்கான அறிகுறியாகும்.

எக்டருக்கு 25 முதல் 30 டன் கிழங்குகள் வரை மகசூல் பெறலாம்.

பயன்கள்:-

காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி வயிறு சுத்தமாகும்.

உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.

நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.

உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.

உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும்.