பீன்ஸ் பயிரிடும் முறை..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-15 10:28:56

இரகங்கள்:-

மலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் வளரும் வகையில் இரண்டு ரகங்கள் உள்ளது.

ஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் மலை பிரதேசங்களில் வளரும் ரகங்கள் ஆகும்.

அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பீன்ஸ் ரகங்கள் ஆகும்.

பருவம்:-

ஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் விளைவதற்கு பிப்ரவரி – மார்ச் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.

அர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் விளைவதற்கு அக்டோபர் – நவம்பர் மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும். குளிர்ந்த சீதோஷண பருவத்தில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

மண்:-

பீன்ஸ் சாகுபடி வண்டல் மண்ணில் அமோகமாக இருக்கும். மண்ணின் கார – அமில தன்மை 5 -6 ஆக இருக்க வேண்டும்.

பயிரிடும் நிலத்தை நன்கு உழுது அதில் தொழு உரத்தை இட்டு நிலத்தை சமன் படுத்த வேண்டும். பின்பு விதையை 30 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.

ஒரு ஹெக்டர்க்கு மலைப்பிரதேசங்களில் 80 கிலோ விதையும், சமவெளி பகுதிகளில் 50 கிலோ விதையும் பயன்படுத்தி பயிரிட வேண்டும்.

நீர்:-

பயிரிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரம்:-

அடிக்கடி தொழுஉரம் வைத்து தேவையற்ற கலைகளை நீக்கி பராமரித்தாலே அதிக மகசூல் பெறலாம்.

அறுவடை:-

100 நாட்களில் பீன்ஸ் அறுவடைக்கு தயாராகும். முதிர்ந்து விடாமல் இளசாக இருக்கும் பொழுது அறுவடை செய்வது நல்லது.

பயன்கள்:-

பீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.

தொண்டைப்புண்,இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.

நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு.

இதயஅடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.

சத்துக்கள்:-

BEANS |

* Based on 100gram

ENERGY

: 158    (KCAL)

PROTEIN

: 7.4    (G)

FATS

: 1    (G)

CARBS

: 29.8    (G)

FIBER

: 1.9    (G)

CALCIUM

: 50    (MG)

IRON

: 2.6    (MG)

VIT C

: 27    (MG)


VIT A

: 34    (MCG)

VIT B1

: 0.34    (MG)

VIT B2

: 0.19    (MG)

VIT B5

: 0    (MG)

VIT B6

: 0    (MG)

FOLATE