வரகு சாகுபடி தொழில்நுட்பம்..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-23 07:50:54

வரகு அறிமுகம்:-

இன்றை இந்திய திருநாட்டில் சிறுதானியப்பயிர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதிகமான விலையும் இந்த சிறு தானியப்பயிர்களுக்கு உண்டு. இவற்றில் குறிப்பாக வரகு பயிர்க்கு அதிக விலையும் உண்டு. வரகு மருத்துவ பயிர்களாகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காவும் பயிரிடப்பட்டு வருகின்றன. இது மிக குறைந்த அளவு நீர் தேவை உள்ள பயிர். இந்த சிறுதானியப்பயிர்கள், மானாவாரி பயிர்களாகவும், தோட்டக்கால் பயிர்களாகவும் இன்று அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருகின்றது.

வரகு ரகங்கள்

கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்ட கோ2, மற்றும் கோ3 மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

 வரகு வயது
 
கோ2 ரகப்பயிருக்கு வயது 135 நாட்கள் ஆகும்.

கோ3 ரகப்பயிருக்கு வயது  115 நாட்கள் ஆகும். 

 வரகு பருவம்
 
ஜீன் - ஜீலை முதல் செப்படம்பர் மற்றும் அக்டோபர் வரை பயிர் செய்யலாம்.
 
 வரகு விதையளவு

ஏக்கருக்கு  1 வரிசை நடவென்றால் 4 கிலோ விதை போதுமானது,  விதைத்தால் 5 கிலோ அளவு விதை தேவைப்படும். 

விதைத்தல் :-

இயந்திரம் மூலம் சிறு தானியப் பயிர்களை விதைப்பதால் அதிகமான இடங்களில் பயிர் செய்யலாம்.  கொள்ளு அல்லது விதைப்பான் உபயோகித்து விதைத்தால் அதிகப்பரப்பளவில் விதைக்கலாம். மற்றும் மண் ஈரம் காக்கப்படும்.

விதைநேர்த்தி:-

ஓரு கிலோ விதைக்கு 2 கிராம் அக்ராசன் மருந்து கலந்து பின்பு விதைகளை அவற்றில் ஊறவிட்டு பின்பு விதைக்கலாம், அல்லது மாட்டு சிறுநீர் கலந்து விதை நோர்த்தி செய்து பின்பு விதைக்கலாம். ரைசோபியம், அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களில் கலந்து பின்பு விதைக்கலாம்.

 வரகு நிலம் தாயரித்தல்

இரண்டு முதல் மூன்று தடைவ நாட்டுக் கலப்பை அல்லது சிறு இரும்பு கலப்பையால் உழவும் பின்பு நிலத்தை சமப்படுத்தி   பின்பு விதைக்கலாம். வரகு சாகுபடிக்கு முன்பு நிலத்தை கோடை உழவு ஓரு செய்திருத்தல் நன்று.

 வரகு நீர்பாசனம்:-

நட்ட முதல் 3 வது நாள் உயிர்நீரும் அதை தொடர்ந்து வாரத்திற்கு இரு முறை நீர்பாசனம் செய்ய வேண்டும்.

 வரகு உரமிடுதல்:-
 
தொழு உரம் அல்லது கம்போஸ்ட் (அடியுரம் ஏக்கருக்கு) 5 டன், தழைச்சத்து 18 கிலோ, மணிச்சத்து 9 கிலோ, சாம்பல் சத்து 5 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
 
வரகு இடைவெளி

1 வரிசை நடவு 25 செ.மீ X 10 செமீ என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 10 செமீ என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 வரகு களையெடுத்தல்:-

களைக்கொத்து ,தந்துலு அல்லது கைரோட்டரி கல்டிவேட்டர் மூலம் செடிகளுக்கு பக்க விளைவுகள் இல்லாமல் களைகளை எடுத்து அகற்றவும். முதல் களை 15 வது நாளிலும் இரண்டாவுது களை 40 வது நாளிலும் எடுக்க வேண்டும். களைகள் எடுப்பதன் மூலமாக மண் ஈரம் ஓரளவு நிலத்தில் நிலை நிறுத்தப்படும். களை யெடுத்து ஓரு முறை இயற்கை உரமான, வேப்பம் புண்ணாக்கு இடுவதால் மண்ணில் உள்ள கூட்டு புழுக்களை அழிக்கலாம்.

பயிர் களைதல்:-

முதல் களை எடுத்ததும் பயிரைக் களைதல் வேண்டும் அப்படி இல்லையெனில் விதைத்த 20 நாட்களுக்குள் களை எடுத்தல் வேண்டும். பயிர் கதிர் விடும் வரை மூன்று முறை களையெடுத்தல் நன்று.

 வரகு பயிர் பாதுகாப்பு:-
 
பூச்சி மற்றும் பூஞ்சானங்கள் இந்த பயிரை அதிகளவு தாக்குவதில்லை. ஓரு சில பூச்சிகள் தாக்கினால் அவற்றிற்கு  வேப்பங்கொட்டை சாறு கலந்த நீரை தெளித்தால் உடனே பூச்சி தொல்லை குறைந்து விடும்.
 
வரகு அறுவடை:-

பயிர் நன்றாக விளைந்து 115 நாட்களில்  காய்ந்த நிலையில் காணப்படும். நல்ல முற்றிய திரட்ச்சியான காய்கள் வந்த பிறகு தானியங்களை அறுவடை செய்து பின்பு பினையில் அடித்து அல்லது இயந்திரத்தில் அடித்து காயவைத்து பின்பு மூடைகளாக கட்டி விற்பனைக்கும், உணவுக்கும் பயன்படுத்தலாம்.

சத்துக்கள்:-

சிறுநீரகம்;

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

மலச்சிக்கல்;

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஆண்மை குறைபாடுகள்;

இக்கால ஆண்கள் அதிலும் இளம் மற்றும் நடுத்தர வயதுள்ள ஆண்கள் பலருக்கு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் ஏற்படுவதால் ஆண்மை சம்பந்தமான குறைபாடு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் காலை அல்லது மதியம் வேளையில் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெகு சீக்கிரத்திலேயே ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

இதயம்;

உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரமொருமுறை வரகரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

புண்கள்;

உடலில் பலருக்கும் பல காரணங்களால் புண்கள், காயங்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் வரகரிசியை சாப்பிட்டு வந்தால், அந்த வரகரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.

புரதம்;

வரகரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.