கிர் மாடு (Gir cow) எப்படி வளர்ப்பது..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-24 05:51:31

கிர் மாடு :-

(Gir cow) என்பது இந்தியாவின்நாட்டு மாட்டு வகைகளுள் ஒன்று. இவை உருவில் பெரியவையாகவும், பார்ப்பதற்கும் எழிலார்ந்தவையாகவும் உள்ளவை.

பூர்விகம்:-

இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது. இவ்வகை மாடுகள் பெருமளவில் அழிந்துவிட்டதால் குஜராத் மாநில அரசு பிரேசில் நாட்டிடமிருந்து இந்த மாடுகளின் 10,000 உயிரணு குப்பிகளை வாங்கி இனப்பருக்கம் செய்ய 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மாடுகளை இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் பாவ்நகர் மகாராஜா பிரேசில் நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் பரிசாக வழங்கிய கிர் மாடுகளின் வாரிசுகள் அங்கே அதிகமாக வாழுகிறது.

தோற்றமைப்பு:-

இதன் தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும்.

சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும்.

இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும்.

காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.

எடை : 310-335. கிலோ.

இதர குறிப்புகள்:-

முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1550.

ஈத்து இடைவெளி - 520 நாட்கள்.

நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர்.

நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.4%

இந்திய மாட்டு இனங்களில் அதிக பால் கொடுக்கும் இனம் இது.அதிக சாதுவான இனமும் இதுதான்.

அனேகமாக அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். சில பசுக்களில் வெள்ளை புள்ளிகளும் சேர்ந்து இருக்கும்.

கொம்புகள் சிறிது பின் நோக்கி வளைந்து பின் பக்கவாட்டில் வளரும் .வலுவான பெரிய கொம்புகள் இருக்கும்.

கன்று பிறந்த 36 மாதங்களுக்கு பிறகு சினை பருவத்திற்கு வர ஆரம்பிக்கும். கன்று ஈன்ற பிறகு பத்து மாதம் வரை பால் கொடுக்கும்.

சாதாரண மேய்ச்சல் மட்டுமே போதுமானது. கண்டிப்பாக காய்ந்த வைக்கோல் ஒரு நாளைக்கு பதினைந்து கிலோ தரவேண்டும். அடர் தீவனம் தேவை பட்டால் அளிக்கலாம்.

கட்டி வைத்து மேய்க்கும் போது ஒரு நாளைக்கு முப்பது கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.பதினைந்து கிலோ காய்ந்த வைக்கோல். அப்போது தான் snf பாலில் நன்கு வரும்.

கிர் மாடுகள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து லிட்டர் பால் வரை கொடுக்கும் . இப்போது பிரபலமாகி வரும் A2 பால் இவற்றின் மூலமாக கிடைக்கும்.

சாதாரண தீவனத்தில் அதிக பால் கொடுக்க கூடிய இனங்களில் முதன்மை வாய்ந்தது. இதற்கு அடுத்தபடியாக இருப்பவை தார்பார்க்கர் இனம். அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த சிகப்பு சிந்தி.

குடல் புழு நீக்கம் கன்று பிறந்த இருபதாவது  நாள் முதல் செய்ய ஆரம்பிக்கலாம்.  மூன்று மாதம் ஒரு முறை தொடர்ந்து செய்யலாம்.

மிக சாதுவான இனம். நெருங்கி பழகினால் மிகுந்த  விசுவாசத்துடன் பழுகும்.