சாஹிவால் மாடு வளர்ப்பது எப்படி..?

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-24 07:48:09

சாஹிவால் மாடு :-

(Sahiwal) என்பது முதன்மையாக பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நாட்டு மாட்டு இனமாகும். இம்மாட்டினம் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாஜிவாலை பூர்வீகமாக‍க் கொண்டவை. [1] இவற்றின் பால் சிவப்பு சிந்தி மற்றும் புட்டனா இனங்களின் பாலைப் போலவே இருக்கும். சாஹிலால் மாடுகள் பஞ்சாப்பில் அருகிவரும் உள்நாட்டு மாட்டு இனமாக கருதப்பட்டு, இந்த மாடுகளை வளர்க்க 'ராஷ்டிரிய கோகுல் மிஷனின்' கீழ் சலுகைகள் வழங்கப் படுகிறது.

விளக்கம்:-

இந்த மாட்டுகள் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இவற்றின் தோல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் காணப்படும் சில சமயங்களில் தோலில் வெள்ளைத் திட்டுகளும் இருக்கும்.

குறைந்த பராமரிப்பு:-

பெரும்பாலும் பாலுக்காக மட்டும்தான் இப்பல்லாம் மாடுகள வளர்க்கறாங்க. அதனாலதான், வெளிநாட்டு மாடுகள வளர்க்கறதுல விவசாயிக அதிக ஆர்வம் காட்டுறாங்க. ஆனா, அந்த மாடுகளுக்கு எந்த வகையிலும் குறைஞ்சதில்ல... சாஹிவால் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள். கிடைச்சதைத் தின்னுட்டு, நாளண்ணுக்கு அதிகபட்சம் 20 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்குது சாஹிவால் ரக மாடுகள். வெளிநாட்டு மாடுகள வெயில், மழைக்கு பாதுகாத்து வளர்த்தாலும், பால் மூலமா வர்ற வருமானத்துல சரிபாதி தீவனத்துக்கே செலவாயிடுது. ஆனா, இந்த மாடுகளை வளர்த்தா... தீவனச் செலவை பத்தி அதிகமா அலட்டிக்கத் தேவையில்ல. குறைஞ்ச செலவு, குறைஞ்ச பராமரிப்புலயே அதிக பால் கொடுக்கும்.
வருடத்தில் 6,000 கிலோ பால்!

இந்தியாவுல பாலுக்கான சிறந்த பசு இனம்னா... அது இந்த சாஹிவால் ரக மாடுங்கதான். ஒரு ஈத்துல (305 நாட்கள்)... 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரைக்கும் பால் கொடுக்கற அற்புத இனம். இதோட பால்ல 4 முதல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்குது. பெரிய மடி, நல்ல சிவப்பு நிறம், கனமான குட்டைக் கொம்பு, சிறிய திமில், கம்பீரமான உடலமைப்புனு பார்க்கறதுக்கே அம்சமா இருக்கும். கடுமையான வெப்பம், கடுமையானப் பனி, மழைனு எதுக்கும் சளைக்காது. வெளிநாட்டு மாடுக, குளிர்காலத்துல அதிகமாகவும், வெயில் காலத்துல கம்மியாகவும் பால் கொடுக்கும். ஆனா, சாஹிவால் உள்ளிட்ட நாட்டு மாடுக, எப்பவும் ஏற்றத் தாழ்வு இல்லாம ஒரே அளவா பால் கொடுக்கும்.

பஞ்சாப் மாநிலத்திலதான் இந்த மாடுகள அதிகமா வளர்க்குறாங்க. நம்ம ஊர்ல செம்மறி ஆடுகளை மந்தையாக மேய்க்குறது மாதிரியே, இந்த மாடுகளை மந்தை, மந்தையா மேய்க்கறாங்க. அதனால இந்த மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுறதே இல்லை. ரொம்ப தூரம் வரைக்கும் மேய்ச்சலுக்கெல்லாம் போயிட்டு வருது. கை வளர்ப்பா வளர்த்தா சொன்னதெல்லாம் கேட்கற அற்புதமான மாடு சாஹிவால். நம்ம ஊருல மாடுகளை முன்னவிட்டு, பின்னாடி போறோம். வடநாட்டுல மேய்க்கறவரு முன்ன போக, அவருக்கு பின்னாடியே போகுது மாடுகள். அதுக்கு காரணம் மாடுகளை வளக்குற முறைகள்தான்.

அன்புக்கு அடிமை:-

சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. முரண்டு பிடிச்சுகிட்டே இருக்கும். அதேநேரத்துல தடவிக் கொடுத்து அன்பா வளர்த்தா, நாய்க் குட்டி மாதிரி காலை சுத்திகிட்டே இருக்கும். பொதுவா எந்த மாடா இருந்தாலும், ஒரே இடத்தில கட்டிப் போடக்கூடாது. தினமும் 3 மணி நேரமாவது சூரிய ஒளி மாடுகளின் உடலில் படுற மாதிரி நடக்க விடணும்.

சாஹிவால் மாடுக 18-ம் மாசத்துல பருவத்துக்கு வந்துடும். நான் வாங்கிட்டு வந்த மாடுகளை மேய்ச்சல் முறையில வளக்குறேன். ஒரு பசுவுக்கு சராசரி 13 லிட்டர் பால் கிடைக்குது. இந்த ரக மாடுகள் கூட்டமா இருக்கத்தான் விரும்பும். அதுனால குறைஞ்சது 5 மாடுகளையாவது ஒண்ணா சேர்த்துதான் வளர்க்கணும். நம்ம ஊருல இந்த மாடுகளை இப்பத்தான் வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க. அதுகளோட எண்ணிக்கை பெருகுறப்ப... இங்கேயே விலை குறைச்சலா கிடைக்க வாய்ப்பிருக்கு'' என்று விரிவாகப் பேசி முடித்த திம்மையா... தேநீர் கொடுத்து உபசரித்தார். அதையருந்தி விடைபெற்ற நம்முடைய நாக்கில், சாஹிவால் மாட்டின் பால் கலந்த அந்தத் தேநீர் சுவை நெடுநேரம் நீடித்தது!- இது கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் முகநூல் குழுவிற்காக பசுமை விகடன் புத்தகத்தில் இருந்து தொகுத்து வழங்கியது.

சிந்து சமவெளி மாடுகள் :-

பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் சாஹிவால் என்பது ஒரு மாவட்டம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த பூமி இது. இங்கு, அதிகமாக இந்த ரக மாடுகள் இருக்கின்றன. அதனாலேயே 'சாஹிவால்' என்ற பெயரில் இந்த மாடுகள் அழைக்கப்படுகின்றன. சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முத்திரைகளில் உள்ள மாடுகளைப் போல அச்சு அசலாக இருக்கின்றன இந்த மாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது!

அருமை தெரிந்த ஆஸ்திரேலியா!

சாஹிவால் ரகத்தின் அருமை தெரிந்த ஆஸ்திரேலியா, கென்யா போன்ற நாடுகள், இந்தியாவில் இருந்து மாடுகளைக் கொண்டு சென்று, இனப்பெருக்கம் செய்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

ரெட்சிந்தி, கிர்!

கிர், ரெட்சிந்தி போன்ற நம் நாட்டு மாடுகள், கலப்புத் தீவனங்கள் எதுவும் இல்லாமல், சாதாரணமாக மேய்ச்சலுக்கு சென்று வந்தே 10 முதல் 18 லிட்டர் பால் வரைக் கொடுக்கக் கூடியவை. இவற்றுக்கு தனியாக பராமரிப்புத் தேவையில்லை.நாட்டு மாடு வளர்த்தால் 25 % மானியம்! நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் நபார்டு வங்கி, நாட்டு மாடு வளர்ப்பதற்கான மொத்தத் தொகையில்
25 சதவிகிதத்தை மானியமாக வழங்கி வருகிறது.

ஜெல்லி தயிர்! சாஹிவால் மாட்டு நெய், தயிருக்கு பெரும் கிராக்கி இருக்கிறது. இதன் தயிர் ஜெல்லி மாதிரி மிகவும் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.