காங்ரேஜ் மாடு மற்றும் குஸ்ராத் மாடு..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-24 10:10:30

காங்க்ரேஜ் மாடு :-

(Kankrej cattle ) என்பது இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாட்டு இனமாகும். இந்த மாடுகள் குசராத் மாநிலம் பனாஸ்காண்டா மாவட்டம், வடக்கு மும்பையின் மேற்கு கடற்கரையில உள்ள பாரத் பகுதியை பூர்வீகமாக‍க் கொண்டவை. மொஹஞ்சதாரோ சித்திரமுத்திரையில் காட்டப்பட்டிருக்கும் காளையானது இந்த மாட்டு இனக் காளைதான் என்று வல்லுநர்கள் கூறுகிறுவதாக கூறப்படுகிறது. இந்த மாடுகள் பன்னாய், நாகர், தளபதா, வாட்தாத், வடியார், வாட்தியார், வாடியல் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.  இம்மாடுகள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடனும் காணப்படுகின்றன. இவை வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன. குஸ்ராத் மாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கான்கரேஜ் மாட்டு இனத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாட்டு இனம் ஆகும். இதற்ககு வைக்கப்பட்ட பெயர் குஜராத் என்ற பெயரின் போர்த்துகீசிய மொழி உச்சரிப்பான குஸ்ராத் என இடப்பட்டது. இவை உயரமாகவும் இணையான உயர்ந்த கொம்புகளுடனும் மாட்டிறைச்சிக்கு உகந்த இனங்களாக வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளின் நிறம் பொதுவாக உடல்பகுதி சாம்பல் நிறத்திலும், தலை மற்றும் பின் உடல்பகுதி கருத்தும் உள்ளதாக இருக்கும். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மாட்டினமான பிரம்மன் மாடு குஸராத் மற்றும் கான்கரேஜ் மாடுகளை கிர் மற்றும் நில்லோரி போன்ற மாடுகளுடன் இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது ஆகும். இவை வெப்ப மண்டல மாடுகளின் இயல்பான தோற்றத்தில் தோளில் திமிலுடன் இருக்கும். இந்த விலங்கு வெப்பத்தை தாங்க‍க்கூடியதாகவும் பூச்சி எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன.

காங்கிரேஜ்- சிந்து சமவெளி மாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த இன மாடுகளுக்கு நோய் தாக்குதல் இருக்காது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 லிட்டர் பால் வரையில் தரும்.

பொருளாதார நன்மைகள்:-

ஒரு ஜெர்சி மாட்டிற்கு தரமான உணவு கொடுத்து, ஏசி ஏற்படுத்தி, மருத்துவரை வரவழைத்தால் தினமும் 25 முதல் 30 லிட்டர் பால் தரும் இதன் மூலம் நமக்கு 450 ரூபாய் வருமானம் வரும்.

ஒரு காங்ரேஜ் மாடு வளர்க்கும் போது அது 10 லிட்டர் பால் கொடுத்தாலும் 800 ரூபாய்க்கு விற்க முடியும். இந்திய காளைகளின் விலையும் அதிகம், ஆனால் ஜெர்சி காளையின் நிலை என்பது உங்களுக்கே தெரியும்.

அடிப்படையில் இந்திய நாட்டுமாடு பாஸ்இன்டிகஸ் ஆகும். ஜெர்சி ஹோலிஸ்டின் இனப்பெயர் பாஸ்டாரஸ் இதனால் இனங்கள் முற்றிலும் மாறுபட்டவை என்பது தெரிகிறது. இந்திய நாட்டு மாடு ஜெபு குடும்பத்தை சேர்ந்தவை. அவற்றுக்கு 21 குணங்கள் உள்ளன. இந்த 21 குணங்களில் ஒரு குணம் கூட ஜெர்சி ஹோலிஸ்டனில் இல்லை. எனவே ஜெர்சி ஹோலிஸ்டைன் மாடு அல்ல அது வேறு விலங்கு.

நாம் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தபோது நாம் கண்டறிந்தது ஜெர்சி ஹோலிஸ்டின் சாணமும் கோமியமும் மண்ணிற்கு பயன் உள்ளது இல்லை. இதன் பாலில் கேடு விளைவிக்கும் புரதம் உள்ளது. அதன் பெயர் பீட்டாகேசின் A1 ஹிஸ்டிடின் புரதம். இது கணையத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஜெர்சி ஹோலிஸ்டின் சுவாசிக்கும் போது மீத்தேன் வாயு வெளியாகிறது.

இந்திய நாட்டுமாட்டின் பசும்பாலிற்கு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கிறது. இந்திய நாட்டுமாடுகளை அழிப்பதற்கு ஜெர்சி ஹொலிஸ்டன் மாடுகள் அறிமுகப்படுத்தப் பட்டன. பசுமைப்புரட்சி, கலப்பு விதைகள், அலோபதி மருத்துவம் போன்றவற்றின் அங்கமாக இதுவும் ஒன்று. உலக சந்தையில் ஜெர்சி ஹோலிஸ்டின் பாலுக்கு அதிக வரவேற்பில்லை, இந்திய பாலுக்கு நிறைய வரவேற்பு உள்ளது.

பால் குடிப்பது இயற்கைக்கு புறம்பானது, கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது. பால் மனித உடலுக்கு ஒரு வெளி பொருளாகும், அதை மனித உடல் எற்காது, இதனால் அதிக பால் தரும் நாட்டு மாடுகளை வாங்க ஆசைப்படாதீர்கள்.

குறைந்தபட்ச பால் கொடுக்கும் நாட்டுமாட்டு ரகங்கள் அல்லது பாலே கொடுக்காத நாட்டு மாட்டு ரகங்கள், வயதான கறவை நின்றுபோன பசுக்களின் சாணமும் கோமியமும் ஜீவாமிர்தம் தயாரிக்க உகந்தவை. பாலேக்கர் விவசாயத்தில 30 ஏக்கர் நிலத்திற்கு ஒரே ஒரு நாட்டுமாடுதான் தேவை.

இந்திய அரசு பாரம்பரிய விவசாயம் எனும் கொள்கையை அறிமுகப்படுத்திள்ளது இது சாண எருவை அடிப்படையாகக் கொண்டது. இரசாயன விவசாயத்தில் கிடைக்கும் அதே விளைச்சல் வேண்டும் என்றால் ஏக்கருக்கு 20 வண்டி சாணஉரம் தேவைப்படும். 20 வண்டி அளவு உரம் வேண்டும் என்றால் 10 நாட்டுமாடு தேவைப்படும்.

இந்த வகையில் இந்தியாவிற்கு 350 கோடி நாட்டுமாடுகள் தேவைப்படும். இந்தியாவில் தற்போது வெறும் 8 கோடி நாட்டுமாடுகள் மட்டுமே உள்ளன, எனவே இந்த பாரம்பரிய விவசாயம் சாத்தியமில்லை. பாலேக்கர் விவசாய முறையில் 3.5 கோடி நாட்டுமாடுகள் போதுமானது, நாம் நாட்டுமாடுகளை பகிர்ந்தளிப்போம்.